/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அல்லுார் -- பனங்காடி ரோடு சேதம் வாகனங்களில் செல்வோர் அவதி
/
அல்லுார் -- பனங்காடி ரோடு சேதம் வாகனங்களில் செல்வோர் அவதி
அல்லுார் -- பனங்காடி ரோடு சேதம் வாகனங்களில் செல்வோர் அவதி
அல்லுார் -- பனங்காடி ரோடு சேதம் வாகனங்களில் செல்வோர் அவதி
ADDED : ஜூலை 13, 2025 11:12 PM

சிவகங்கை,: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அல்லுார் - - பனங்காடி ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், நாட்டரசன்கோட்டை விலக்கு அருகே அல்லுார் - பனங்காடி ரோடு செல்கிறது. இந்த ரோடு வழியாக விஜயமாணிக்கம், அல்லுார், சாத்தனி, ரோஸ் நகர் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்களில் செல்லலாம். சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வழியாக சுற்றியும் இக்கிராமங்களுக்கு சென்று வரலாம். ஆனால், மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டரசன்கோட்டை விலக்கு வழியாக செல்லும் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்போது வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. நாட்டரசன்கோட்டை விலக்கில் இருந்து செல்லும் அல்லுார் - பனங்காடி ரோடு 2.5 கி.மீ., துாரம் வரை வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாகவும், ரோடுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ரோட்டை புதுப்பித்து தர வேண்டும்.