ADDED : பிப் 03, 2026 05:43 AM
தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்ற ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமை வகித்தார்.
மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணை தலைவர் பிரைட், இணை செயலாளர்கள் பிரபாகர், ஜோலியோ, பொருளாளர் பிரபுலின் பாபு முன்னிலை வகித்தனர். மன்ற இயக்குநர் எட்வர்ட் லெனின் வரவேற்றார்.
மன்ற செயலாளர் சண்முகநாதன் அறிக்கை வாசித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்ராஜ், உதவி தலைமையாசிரி யர் விக்டர் டிசோசா, முன்னாள் ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், சார்பதி வாளர் சூசை சேசுதாஸ், செழியன், பழனிக் குமார், டாக்டர் புரூகான் அலி, கல்லூரி தாளாளர் லியோ பெலிக்ஸ் லாயிஸ் ஆகியோர் பேசினர். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களான டாக்டர்கள் பெரியசாமி, பூமிநாதன், தலைமையாசிரியர் பிரிட்டோ, பட்டி மன்ற நடுவர்கள் ராமநாதன், ராகவேந்திரன், சந்தியாகு, லியோன், சவுந்திரமூர்த்தி ஆகி யோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்டீபன் மிக்கேல்ராஜ், ஈசாக், ஞான தீபன் செய்திருந்தனர்.

