ADDED : செப் 27, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியின் வருடாந்திர முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
முன்னாள் மாணவர் தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். செயலாளர் மற்றும் நிர்வாக அலுவலர் சிவராம் தலைமை வகித்தார். முதல்வர் விசுமதி வாழ்த்தி பேசினார்.
முன்னாள் மாணவர்கள் மல்லல் ஊராட்சி வருவாய் ஆய்வாளர் ஜெசிமா பேகம், வனப் பாதுகாவலர் ஹஸீனா பேகம், ஆசிரியர் திராவிடசெல்வி, தொழில்முனைவோர் அருள் ஜெசி, குடும்ப தலைவி வெண்ணிலா அழைக்கப்பட்டனர். முன்னாள் மாணவி ஆங்கிலத் துறை பேராசிரியர் திவ்யா நன்றி கூறினார்.

