ADDED : ஜன 01, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் 41 ஆண்டுக்கு முன் படித்த பழைய மாணவர்கள் நேற்று குடும்பத்தாருடன் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.
இக்கல்லுாரியில் 1982 -- 85 வரை பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் நேற்று சந்தித்தனர்.
கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி வரவேற்றார். முன்னாள் பேராசிரியர்களை பாராட்டி, நினைவு பரிசுகள் வழங்கினர். அண்ணாமலை பல்கலை இயற்பியல் துறை தலைவர் ராக்கப்பன் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவரான பேராசிரியர் சிவகாமிநாதன் நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.