ADDED : ஜன 28, 2024 05:26 AM
தேவகோட்டை, : தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றத்தின் சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணை தலைவர் கண்ணப்பன், ஆசிரியர் சண்முகநாதன் இணை செயலாளர்கள் பிரபாகர், ஜோலியோ, பொருளாளர் பிரிட்டோராஜ் முன்னிலை வகித்தனர்.
இயக்குநர் விக்டர் டிசோசா வரவேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ, தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, தாளாளர் குழந்தைராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் இக்னேசியஸ் பிரிட்டோ, யாகு வாழ்த்தினர்.
முன்னாள் மாணவர்கள் அக்குபங்சர் நிர்வாகி டாக்டர் சங்கர், குவைத் உள்கட்டமைப்பு அமைச்சக பொறியாளர் சேகு யூசுப் உட்பட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவ மன்ற துணைத் தலைவர் பிரைட் நன்றி கூறினார்.