ADDED : மே 06, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1998-99ம் ஆண்டில் கலைப் பிரிவில் பயின்ற மாணவர்கள்-ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாறு ஆசிரியர் கார்த்திகேயன், கணக்குப்பதிவியல் ஆசிரியர் அன்புச்செல்வி ஆகியோரை வரவேற்றனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்கினர்.