/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி அ.ம.மு.க.,
/
அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி அ.ம.மு.க.,
ADDED : டிச 22, 2025 06:26 AM

தேவகோட்டை: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அ.ம.மு.க., வளர்ந்துள்ளது என தேவகோட்டையில் அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன்பேசினார்.
தேவகோட்டையில் சட்டசபை தொகுதி அ.ம.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில செயலாளர் டேவிட் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார்.
அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் பேசியதாவது, அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அ.ம.மு.க., உருவெடுத்துள்ளது. வெற்றிபெறும் கூட்டணியில் தான் நம் கட்சி இருக்கும்.
ஏற்கனவே இத்தொகுதியில் 44 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றுள்ளோம். கட்சியின்கட்டமைப்பு பலமாக உள்ளது. அ.ம. மு.க.,விற்கு சுயநலம், சுயலாபத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், காரைக்குடி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தேர்போகி பாண்டிதான்.
சோதனை, வேதனைகளை கடந்து 8 ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
வெற்றிக்கு பின் அமைச்சர் பதவி நம் கட்சிக்கு கிடைக்கும். நான் போட்டியிடாவிட்டாலும், கட்சிக்கு கடுமையாக உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக தொகுதியை பெற்றுத்தருவேன், என்றார்.

