/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்
/
அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்
அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்
அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்
ADDED : ஜூலை 19, 2025 11:51 PM
காரைக்குடி: காரைக்குடி அம்மா உணவகம் தாமதமாக திறக்கப்படுவதால் பசியோடு காத்திருக்கும் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடியில் அம்மா உணவகத்தில் தினமும் கூலித் தொழிலாளர்கள், ஏழை மக்கள், ஆதரவற்ற முதியோர், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மதியம் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரையும் உணவு வழங்கப்படுகிறது. காலையில் இட்லி அல்லது பொங்கல், மதியம் தயிர்சாதம் மற்றும் சாம்பார் அல்லது புளி சாதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மதிய நேரத்தில் தாமதமாக அம்மா உணவகம் திறக்கப்படுவதால், அம்மா உணவகத்தை நம்பியுள்ள மக்கள் சிரமம் அடைகின்றனர். 12:00 மணிக்கு திறக்க வேண்டிய அம்மா உணவகம் மதியம் 12:30 வரையும் திறக்கப்படாததால் உணவகம் முன்பு முதியவர்கள் காத்துக் கிடந்தனர். பின்பு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அம்மா உணவகம் திறக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.