/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சம்பள உயர்வு இல்லையே அம்மா உணவக ஊழியர்கள் குற்றச்சாட்டு
/
சம்பள உயர்வு இல்லையே அம்மா உணவக ஊழியர்கள் குற்றச்சாட்டு
சம்பள உயர்வு இல்லையே அம்மா உணவக ஊழியர்கள் குற்றச்சாட்டு
சம்பள உயர்வு இல்லையே அம்மா உணவக ஊழியர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 03, 2024 06:19 AM
சிவகங்கை: சிவகங்கை அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வே இல்லை என்று பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2015ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் அனைத்து தரப்பு மக்களும் தினந்தோறும் காலை மற்றும் மதிய வேளையில் குறைந்த செலவில் உணவை சாப்பிட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இதில் சிவகங்கை நகரில் தெப்பக்குளம் பகுதியிலும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களிலும், காரைக்குடி நகரில் நீதிமன்றம் அருகேயும், தேவகோட்டை நகரில் பஸ் நிலையம் பகுதி என மொத்தம் 4 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகங்கள் மூலம் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையும், மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையும் உணவு விற்கப்படுகிறது. காலையில் சாம்பாருடன் இட்லி ரூ.1-க்கு வழங்கப்பட்டு வருகிறது. மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வாரத்திற்கு ஒரு நாள் வெரைட்டி சாதமாக புளியோதரை மற்றும் தக்காளி சாதம் ரூ.5-க்கு வழங்கப்படுகிறது.
மருத்துவக்கல்லுாரி அம்மா உணவக பணியாளர்கள் கூறுகையில், இந்த உணவகத்திற்கு மளிகை உள்ளிட்ட காய்கறி பொருட்கள் தடையின்றி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு காலையில் 150 பேரும், மதியம் 250 பேர் வரை சாப்பிடுகின்றனர். இந்த உணவகத்தில் மொத்தம் 12 பெண்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் போதுமான ஊதியம் எங்களுக்கு கிடைக்கவில்லை. மிக குறைந்த ஊதியம் மட்டுமே வழங்குகின்றனர். எங்களது ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும், என்றனர்.