/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் வேகம் எடுக்காத அம்ரூத் திட்டப்பணிகள்
/
காரைக்குடியில் வேகம் எடுக்காத அம்ரூத் திட்டப்பணிகள்
காரைக்குடியில் வேகம் எடுக்காத அம்ரூத் திட்டப்பணிகள்
காரைக்குடியில் வேகம் எடுக்காத அம்ரூத் திட்டப்பணிகள்
ADDED : அக் 19, 2025 09:14 PM

சிவகங்கை: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் 2.0 திட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள், வேகம் எடுக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி கல்வி நகராக இருப்பதாலும், மாஸ்டர் பிளான் திட்டத்துடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 1.50 லட்சம் மக்கள் தொகையுடன் செயல்படுகிறது. இது தவிர இங்குள்ள பள்ளி முதல் பல்கலை, பொறியியல் கல்லுாரிகள் வரை படிப்பிற்காகவும், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் வேலைக்காக ஏராளமானவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயிலில் காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக ராமேஸ்வரம் - சென்னை, காரைக்குடி - மன்னார்குடி, பெங்களூரு, வடமாநில ரயில்கள் என 32 ரயில்கள் காரைக்குடி ஸ்டேஷன் வழியாக செல்கிறது. நாள் ஒன்றுக்கு இங்கிருந்து பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 1485 பயணிகள் வரை செல்வதின் மூலம் மாதத்திற்கு ரூ.40 லட்சம் வீதம், ஆண்டுக்கு ரூ.4.80 கோடி தெற்கு ரயில்வே வருவாய் ஈட்டி வருகிறது.
அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடி செட்டிநாடு பாரம்பரிய நகரமாக இருப்பதாலும், மாநகராட்சி அந்தஸ்திற்கு நகரம் வளர்ந்துள்ளதால், காரைக்குடி ஸ்டேஷனை தரம் உயர்த்த மத்திய அரசு அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடியை 2023 ம் ஆண்டில் ஒதுக்கியது. இந்த நிதியின் மூலம் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நகரும் (எஸ்கலேட்டர்) படிக்கட்டு, லிப்ட், வாகன நிறுத்துமிடம், பாரம்பரிய கட்டட முறைக்கு ஏற்ப நுழைவு வாயில், பயணிகள் அமர கூடுதல் இடம், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை குறிப்பிட டிஜிட்டல் போர்டு, சி.சி.டி.வி., கேமராக்கள், நவீன குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடித்துவிடும் நோக்கத்தில் பணிகளை துவக்கினர்.
அக்கறை செலுத்தாத அதிகாரிகள் ஆனால் பணிகளில் வேகம் காட்ட தெற்கு ரயில்வே நிர்வாகம் முழுமையாக அக்கறை காட்டவில்லை. பிளாட்பாரத்தை கடக்க நடைபாதை மேம்பாலம், லிப்ட் உள்ளிட்ட வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில்வே அதிகாரிகள் 2025 செப்.,க்குள் அனைத்து பணிகளும் முடியும் என உறுதி அளித்த போதும், காரைக்குடியில் இன்னும் வளர்ச்சி பணிகள் முடிந்தபாடில்லை.
குறிப்பாக பயணிகளின் வசதிக்கென நகரும் (எஸ்கலேட்டர்) படிக்கட்டு அமைக்க பூர்வாங்க பணி கூட துவக்கவில்லை. தற்போது பிளாட்பாரத்திற்கு செல்ல நடைபாதை மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. ரயில்வே நிர்வாகம் 2 ஆண்டாக இழுபறி நிலையில் வைத்துள்ள வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்தி காரைக்குடி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.