/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2025 05:32 AM
சிவகங்கை: அங்கன்வாடியில் மேற்பார்வையாளர் கிரேடு 1, கிரேடு பதவி உயர்வில் அரசின் பாரபட்சத்தை கண்டித்து வட்டார அளவில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கல்லல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாண்டி மீனாள் தலைமை வகித்தார். மாநில தலைவர் பாக்கியமேரி, ஆனந்தி, ராணி, சிவகங்கையில் வட்டார தலைவர் அமுதா, மாவட்ட தலைவர் ஜெயமங்கலம், பார்வதி, கலைச்செல்வி, திருப்புத்துாரில் வட்டார தலைவர் பொன்மலர், லட்சுமி புவனா முன்னிலை வகித்தார்.
சிங்கம்புணரியில் வட்டார தலைவர் செல்வராணி, கவுசல்யா, சித்ரா, எஸ்.புதுாரில் வட்டார தலைவர் கலைச்செல்வி, சித்ரா, காளையார்கோவிலில் வட்டார தலைவர் செல்வி, ராதா, செல்வ குமாரி பங்கேற்றனர்.

