/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடி பணியாளர்கள் ஒப்பாரி போராட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் ஒப்பாரி போராட்டம்
ADDED : மே 04, 2025 06:16 AM
சிவகங்கை : சிவகங்கையில் அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரண்டாம் நாளாக ஒப்பாரி வைத்தும் கும்மி அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் 2023ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நேற்று இரண்டாம் நாளாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரே ஒப்பாரி வைத்தும் கும்மி அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

