ADDED : ஜூன் 22, 2026 10:56 PM

அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் ஆனித் உத்திர திருநாளை முன்னிட்டு அதிகாலை நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது.
மூவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்மன் மாணிக்க வாசகருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. ருத்ராட்சம் கேடக வாகனத்தில் நட ராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் அலங்காரத்தில் வீதி உலா வந்தனர்.
