UPDATED : நவ 25, 2026 05:52 PM
ADDED : நவ 25, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.
மாவட்ட அளவில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை தன் உயிரை பொருட்படுத்தாது வீர, தீரத்துடன் காப்பாற்றியவர்களுக்கு 2027 குடியரசு தின விழாவின் போது, முதல்வரால் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற டிச., 8 ம் தேதிக்குள் ’’http://awards.tn.gov.in’’ இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி உடைய நபர்கள் வீர தீர செயலை தெளிவாக விவரிக்கும் அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல அலுவலகம், சிவகங்கையில் சமர்பிக்க வேண்டும் என்றார். ///
