/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அன்னவாசல் ரோடு
/
வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அன்னவாசல் ரோடு
ADDED : ஜன 18, 2024 05:56 AM

மானாமதுரை : மானாமதுரையில்இருந்து அன்னவாசல் வழியாக தேளி, நரிக்குடி செல்லும் ரோட்டில் அன்னவாசல் வரை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவிற்கு ரோடு இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில்இருந்து வளநாடு, கிளங்காட்டூர் அன்னவாசல் வழியாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு ரோடு போடப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ரோடு சீரமைக்கப்படவில்லை.
அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள், ஊழியர்கள் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்லும் போது கீழே விழுந்து காயமடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.