நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: தமிழ்நாடு ஓய்வு அலுவலர், ஆசிரியர் சங்க ஆண்டு விழா நடந்தது.
தலைவர் அமல்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் திருஞானசம்பந்தர் கொடியேற்றினார். கிளை துணை தலைவர் பொன்சோமசுந்தரம் வரவேற்றார். செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சோமசுந்தரம் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். துணை தலைவர் கருப்பையா, சங்க ஆலோசகர் மீனாட்சி சுந்தரம், மகளிர் அணி முத்துக்காமாட்சி, சார்நிலை கருவூலர் கலையரசி, தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ், வைரஸ் லயன்ஸ் சங்க தலைவர் ராணு, செயலாளர் சிரஞ்சீவி, போலீஸ் நலச்சங்க மாநில துணை தலைவர் ராமநாதன் பங்கேற்றனர். சுடலைமுத்து நன்றி கூறினார்.