ADDED : மார் 11, 2024 11:18 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி : காரைக்குடி அமராவதிப்புதுாரில் சி.எஸ்.ஐ.எப்., 55வது ஆண்டு விழா நடந்தது.
அழகப்பா பல்கலை. துணைவேந்தர் க.ரவி தொடங்கி வைத்தார். சீனியர் கமாண்டன்ட் சங்கர் குமார் ஜா தலைமையேற்றார். துணை கமாண்டன்ட் நாகரா மோகன் கலந்து கொண்டனர். வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. சாகச நிகழ்ச்சிகளும், பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பும் நடந்தது.
