நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமறாக்கி தெற்கு ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பாலாமணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வளர்மதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை ஜெனிட்டா வரவேற்றார். ஆசிரியர் அருண்பார்க்கர் நன்றி கூறினார்.
* புழுதிபட்டி துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் கருப்பசாமி தலைமையில் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதாமலர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜேம்ஸ் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர்கள் அப்சரா பானு, ஜெயலட்சுமி, கணேசன், கிறிஸ்டோபர், ராதாகிருஷ்ணன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் ஆனந்தவள்ளி, முன்னாள் ஊராட்சி தலைவர் லட்சுமி பங்கேற்றனர்.

