
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை, எம்.கரிசல்குளம் மானாசாலையில் செயல்பட்டு வரும் குட் வில் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா எம்.கரிசல்குளம் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் பூமிநாதன் தலைமை வகித்தார். விளையாட்டு மற்றும் 10 மற்றும் பிளஸ்1,பிளஸ்2 வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நடிகை தேவயானி வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. முதல்வர் லெட்சுமி நன்றி கூறினார்.

