ADDED : மார் 20, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ஜான் சார்லஸ் முன்னிலை வகித்தனர்.
பள்ளிச் செயலாளர் நடேசன் வரவேற்றார். தலைமையாசிரியர் பாண்டிய ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.
அரசு மருத்துவக் கல்லுாரி உதவி நிலைய மருத்துவ அலுவலர் தென்றல், நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் சிறப்பு செய்தனர்.
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கவுன்சிலர் விஜய குமார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் முகமது காசிம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நவநீதம் பேசினர்.
