ADDED : மார் 25, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் பொன்னி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் தெய்வானை ஆண்டறிக்கை வாசித்தார்.
படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நித்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வசந்தமலர், வானவில் மன்ற கருத்தாளர் ஜெயப்பிரியா, சண்முக சுந்தரம் பேசினர். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.
