நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ரயில்வே காலனி பாபா பள்ளி வளாகத்தில் உள்ள நலம் தரும் சீரடி சாய் பாபா கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம்,108 சங்குகளை வைத்து சங்காபிஷேகமும்,தொடர்ந்து அர்ச்சகர் நாகமணி தலைமையில் ஹோமம் வளர்க்கப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது.
ஏற்பாடுகளை நிறுவனர் ராஜேஸ்வரி,தாளாளர் கபிலன்,நிர்வாகி மீனாட்சி மற்றும் சாய் பாபா பக்தர்கள் செய்திருந்தனர்.