நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே குருந்தங்குளம் அழகு நாச்சியம்மன், இருளாயி அம்மன், சோனை கருப்பணசாமி கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது.
யாகசாலைகளில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பால்,பன்னீர், சந்தனம்,நெய், இளநீர்,திரவியம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு புனித நீரை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாட்டை குருந்தங்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.
///