ADDED : மார் 27, 2026 06:07 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை,மார்ச் 28-
மானாமதுரை தல்லாகுளம் நான்கு வழிச்சாலை நடுவே தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் நேற்று நடைபெற்ற வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். அன்னதானமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,பொதுமக்கள்,பக்தர்கள் செய்திருந்தனர்.
