/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை * ரூ.1.24 லட்சம் சிக்கியது

ADDED : அக் 24, 2024 02:31 AM

காரைக்குடி:காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.24 லட்சத்தை கைப்பற்றினர்.
காரைக்குடியில் திருச்சி -ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நிலைய அலுவலராக நவநீதகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.
தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை,ரைஸ்மில் ,வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. நேற்று மாலை டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது. தலைமைக் காவலர் ஒருவரது பைக்கில் ரூ.60 ஆயிரம், ஓய்வறையில் 64 ஆயிரத்து 512 இருந்தது தெரிய வந்தது. பணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.