sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்

/

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் : சர்வேயர், வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்


ADDED : ஜூலை 23, 2011 10:06 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : பட்டா மாறுதலுக்கு இனி வி.ஏ.ஓ.,க்களிடமும் விண்ணப்பிக்கலாம் என்ற அரசு உத்தரவை, காலிப்பணியிடங்களை நிரப்பி விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள், சர்வேயர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டா மாறுதலுக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்துகிடப்பதை தவிர்க்கவும், பட்டா மாறுதல் குறித்த விசாரணையில் அலைக்கழிக்கப்படுவதை தடுக்கவே இனி வி.ஏ.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இனி பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால் சுணக்கம் இன்றி விரைந்து வழங்க வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500 வி.ஏ.ஓ., பணியிடங்களில் 4, 500 இடமும், 1,100 பிர்காக்களில் 550 சர்வேயர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அரசு வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமையை குறைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் மேலும் கூடுதல் சுமையை திணித்துள்ளதாக வி.ஏ.ஓ.,க்கள், சர்வேயர்கள் புலம்புகின்றனர்.



சர்வேயர் ஒருவர் கூறுகையில், '' தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் நாங்களே செய்து வருகின்றோம். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டாக கோரிக்கை வைத்தும் கடந்த தி.மு.க., அரசு செவிசாய்க்கவில்லை. புதிய அரசு மேலும் கூடுதல் சுமையை சுமத்துகின்றனர். துணை தாசில்தார்கள், தாசில்தார்கள் பதவி உயர்வு அடிப்படையில் சென்றுவிட்டனர். உதவியாளர்களும் பணிஉயர்வு பெற்று சென்று விட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அடிப்படை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரசு இந்த பணியிடங்களை நிரப்பாமல் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தவுடன் வழங்க முடியாது,'' என்றார்.










      Dinamalar
      Follow us