ADDED : பிப் 13, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்துறை (குரூப் 2) நியமன அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பூங்கோதை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். மாநில பொது செயலாளர் வே.தர்மராஜ் சிறப்புரை ஆற்றினார். எம்.பி., தேர்தலில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் முடியும் முன்பே தமிழக அரசு செலவின தொகையை வழங்கிட வேண்டும்.
2023ம் ஆண்டிற்கான தாசில்தார், துணை தாசில்தார் பட்டியல் வெளியிட வேண்டும். நேரடி நியமன அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். வருவாய்துறையில் அனைத்து பணியிட மாற்றமும், கவுன்சிலிங் மூலமே நடத்தப்பட வேண்டும் உட்பட 12 தீர்மானங்களை நிறைவேற்றினர்.