ADDED : ஜன 18, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காங்., கட்சியில் கிராமம்,பேரூர், நகரம் தோறும் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் சட்டசபை வாரியாக சீரமைப்பு குழுவை மாநில தலைவர் செல்வபெருந்தகை ஏற்படுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடிக்கு கருப்பையா, திருப்புத்துாருக்கு டி.இளம்பரிதி, சிவகங்கைக்கு ஏ.என்.சோனை, மானாமதுரை (தனி)க்கு டி.ஜே., பால்நல்லதுரை நியமிக்கப்பட்டுள்ளனர்.