/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலைவாய்ப்பு முகாமில் 372 பேருக்கு நியமன ஆணை
/
வேலைவாய்ப்பு முகாமில் 372 பேருக்கு நியமன ஆணை
ADDED : அக் 26, 2025 05:22 AM
சிவகங்கை: காரைக்குடியில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 372 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கலைக்கல்லுாரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். 73 தனியார் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
1378 இளைஞர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 10 மாற்றுதிறனாளிகள் உட்பட 372 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, அழகப்பா பல்கலை கல்வி குழும தலைவர் ராமநாத வைரவன்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ்,தாசில்தார் ராஜா,கல்லுாரி முதல்வர் ேஹமமாலினி கணேசன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

