UPDATED : நவ 27, 2026 04:24 PM
ADDED : நவ 27, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை ரோட்டரி சங்க கூட்டம் தலைவர் திருவேங்கடம் தலைமையில் நடந்தது.
செயலாளர் சண்முகம் வரவேற்றார். அரசு மருத்துவமனைக்கு சேவுகன் அண்ணாமலை டிரஸ்ட் மூலம் மகப்பேறு கட்டடம் கட்டி கொடுத்த சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன், ரோட்டரி ஆளுநராக தேர்வு செய்யப்பட உள்ள மயில் பாலசுப்பிரமணியன் பாராட்டப்பட்டனர். முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம், பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன், மண்டல துணை ஆளுநர் கதிரேசன், பேசினர்.பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
