ADDED : ஆக 12, 2025 06:40 AM
மானாமதுரை : மானாமதுரையில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி செவன்த் டே மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இதில் குட்வில் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கம்,கபடியில் முதலிடமும், 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 400 மீ., தொடர் ஓட்டம், 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல்,110 மீ., ஓட்டப் போட்டிகளில் முதலிடமும்,800 மீ., ஓட்டத்தில் 2ம் இடமும், 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 400 மீ., தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல், 400 மீ., தடை தாண்டும் ஓட்டம்,வட்டு எறிதல்,கபடி பிரிவுகளில் முதலிடமும், குண்டு எறிதலில் 2ம் இடமும் பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை தாளாளர் பூமிநாதன்,முதல்வர் லட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.