ADDED : நவ 22, 2025 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் நடந்தது.
திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசளித்து வருகிறார். இந்தாண்டும் பரிசு வழங்கப்பட்டது.
தலைமையாசிரியை அனுராதா வரவேற்றார். மடப்புரம் முன்னாள் ஊராட்சி தலைவர் மகேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவுக்கரசு மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

