ADDED : மே 16, 2026 06:16 AM

அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி பெற்று வருவதாக தாளாளர் கிறிஸ்டிராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தேர்வெழுதிய 95 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியல், கணினி பயன்பாடு பிரிவுகளில் 2 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவி கண்மணி 580, சந்தோஷ் 569, பாலசிவா 567 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
580க்கு மேல் ஒரு மாணவரும், 550க்கு மேல் 10 மாணவர்களும், 500க்கு மேல் 43 மாணவர்களும், 450க்கு மேல் 28 மாணவர்களும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர் வள்ளிமயில் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன என்றார்.
