ADDED : பிப் 01, 2026 05:43 AM

மானாமதுரை: தெ.புதுக்கோட்டையில் தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரி யராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாநில நல்லாசிரியர், தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சிவகுருநாதனுக்கு பாராட்டு விழா நடந்தது.
தெ. புதுக்கோட்டையில் பழமை வாய்ந்த எம். கே.என்., அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் 50 வருடங் களுக்கு முன்பு ஆரம்பக் கல்வி படித்த மாணவரான சிவகுருநாதன் தொடர்ந்து மேல்படிப்பு படித்து ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் 30 ஆண்டுகளாக இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
இவரது பணி நிறைவு விழா பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள், கிராம மக்கள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினர்.
பள்ளி வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சத்தை நிர்வாக கமிட்டியிடம் அவர் வழங்கினார்.
