/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறனறிதல் தேர்வு ஆசிரியர் கோரிக்கை
/
திறனறிதல் தேர்வு ஆசிரியர் கோரிக்கை
ADDED : அக் 14, 2025 04:00 AM
சிவகங்கை: தமிழ் இலக்கிய திறனறி தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர் களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொது செய லாளர் இளங்கோ கோரிக்கை விடுத்து உள்ளார்.
அவரதுகோரிக்கை: -
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்களிடம் மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு ஆண்டுதோறும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடத்தப் படுகிறது.
நடப்பாண்டு தமிழ் இலக்கியத்திறனறித் தேர்வு தமிழகத்தில் அக்.,11ல் நடந்தது. இத்தேர்வு அறை கண் காணிப்பாளர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டனர். விடுமுறை நாளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்றார்.