/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடைக்கு முன்பே வறண்ட நீர்நிலை தண்ணீர் இன்றி தவிக்கும் கால்நடைகள்
/
கோடைக்கு முன்பே வறண்ட நீர்நிலை தண்ணீர் இன்றி தவிக்கும் கால்நடைகள்
கோடைக்கு முன்பே வறண்ட நீர்நிலை தண்ணீர் இன்றி தவிக்கும் கால்நடைகள்
கோடைக்கு முன்பே வறண்ட நீர்நிலை தண்ணீர் இன்றி தவிக்கும் கால்நடைகள்
ADDED : பிப் 01, 2024 04:21 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கோடைக்கு முன்பாகவே நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றன.
இத்தாலுகாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும், பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் வராததாலும், உப்பாற்றில் வந்த தண்ணீரை மதுரை மாவட்ட சொக்கலிங்கபுரம் பகுதியில் தனி நபர்கள் சிலர் அடைத்து பயன்படுத்தியதாலும் இப்பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கண்மாய்களில் போதிய தண்ணீர் தேங்கவில்லை.
இந்நிலையில் கோடை துவங்கும் முன்பாகவே 90 சதவீத நீர் நிலைகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியுள்ளது. இதனால் ஆடு மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திரியும் மான்கள், காட்டு மாடுகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் வனத்துறை சார்பில் முக்கிய இடங்களில் கால்நடைகள், வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.