ADDED : செப் 21, 2026 12:59 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை பாரம்பரிய தொல்லியல் தளத்தில் இயற்கை மரபு நடை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுச்சூழல் குறித்து விளக்கம் அளித்தனர்.
இங்கு 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிறப்பு நிற பாறை ஓவியம், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுக்கள், கற்படுக்கைகள், சமணர் கால ஸ்வஸ்திக் குறியீடு, 1,200 ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் கால குடைவரை கோயில், மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் போன்ற வரலாற்று சிறப்பு சின்னங்கள் குறித்து விளக்கப்பட்டது. தொல்நடை குழு நிறுவனர் காளிராசா விளக்கம் அளித்தார்.
அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர் அய்யனார், சேறல் ஆய்வு மன்ற உறுப்பினர் தமிழ்தாசன், ஆய்வாளர்கள் எஸ்.கண்ணன், டி.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
