/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நதிக்கரையில் பானை ஓடு தொல்லியல் துறை ஆய்வு
/
நதிக்கரையில் பானை ஓடு தொல்லியல் துறை ஆய்வு
ADDED : அக் 08, 2025 02:50 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்அருகே கிருதுமால் நதிக்கரையில் பழமையான பானை ஓடுகள் இருப்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்
கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் பல கட்ட ஆய்வு நடத்தி பண்டைய தமிழர்கள் கால வரலாற்றை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு தொல்லியல் பொருட்களை கண்டறிந்து அவற்றை அங்கு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.திருப்புவனம் தாலுகா, பழையனுார் அருகே பிரான்குளம் கிருதுமால் நதிக் கரையில் 2000 ஆண்டு பழமையான பானை ஓடுகள் இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கீழடி, ராமநாதபுரத்தை சேர்ந்த தொல்லியல் அலுவலர்கள், மாணவர்கள் எந்தந்த இடங்களில் பானை ஓடுகள் கிடக்கின்றன என்பது குறித்து இங்கு கள ஆய்வு செய்தனர்.தொல்லியல் அலுவலர்கள் கூறியதாவது '' தொல்லியல் துறை உத்தரவுப்படி பிரான்குளம் கிருதுமால் நதிக் கரையோரம் பானை ஓடுகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளோம் என்றார்.