/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
/
வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
ADDED : அக் 14, 2024 08:51 AM

இளையான்குடி : இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவின் நிறைவாக அம்பு எய்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் ஆயிர வைசிய சபை சார்பில் நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. தினமும் அம்மன் ராஜாங்க சேவை, காமாட்சி, உக்கிரபாண்டியன், அன்னபூரணி, மீனாட்சி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினர். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கோயிலில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.
அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கினர். விழா ஏற்பாட்டை இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் செய்தனர்.