/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்பால் குறுகிய அரியக்குடி சாலை
/
ஆக்கிரமிப்பால் குறுகிய அரியக்குடி சாலை
ADDED : ஜூலை 10, 2025 02:43 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி ரயில்வே கேட் முன்பு கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காரைக்குடியில் அரியக்குடி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இலுப்பக்குடி, அரியக்குடி, பொன்நகர், லட்சுமி நகர் மாத்துார் செல்லும் சாலையாக இச்சாலை உள்ளது. அதிகரித்து வரும் குடியிருப்புகளால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அரியக்குடி ரயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர். ரயில்வே கேட் மூடப்படும் போது நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடப்பதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில் அரியக்குடி ரயில்வே கேட்டு முன்பு ஒரு சில கடைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது வரிசையாக ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கபட்டுள்ளன.
கடைக்கு வருவோர் சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், ரயில்வே கேட் மூடும் போது மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.