ADDED : பிப் 09, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கையை சேர்ந்த லிங்கநாதன், சென்னையில் இருந்து மண்டபத்திற்கு நேற்று அதிகாலை சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
சிவகங்கை அருகே வந்த போது அவரது விலை உயர்ந்த அலைபேசியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மானாமதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரணை செய்து அலைபேசி திருடிய சிவகங்கை அய்யாச்சாமியை 35, கைது செய்தார்.

