UPDATED : ஜூன் 04, 2026 03:55 PM
ADDED : ஜூன் 04, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:கானாடுகாத்தானை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 62. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்து வந்தார். இங்கு கணவன் ,மனைவி வேலை செய்து வந்தனர்.
இவர்களது மகளான 11 வயது சிறுமியிடம் அலைபேசியை காட்டியும், தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் சுப்பிரமணியன் பலமுறை பாலியல் தொல்லை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் சுப்பிரமணியனை போச்சோ வழக்கில் கைது செய்தனர்.
