ADDED : ஆக 15, 2026 11:57 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமையாசிரியர் பாரதிதாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் லெட்சுமிதேவி, இந்திர தேவி முன்னிலை வகித்தனர். இசை வாய்ப்பாடு, வில்லுப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் 16 பள்ளிகளிலிருந்து 600 மாணவர்கள் கலந்துகொண்டனர். வட்டார மேற்பார்வையாளர் அழகுராணி, சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அழகர்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ கலந்து கொண்டனர்.
