ADDED : ஆக 25, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.26-சிவகங்கையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நடைபெற்றது. மாணவர்களுக்கு கவின்கலை, வாய்ப்பாட்டு, கருவி இசை, காற்றுகருவிகள், தந்தி கருவிகள், நாடகம், நடனம் என 32 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மாரிமுத்து, (தனியார் பள்ளி) வடிவேலு, (தொடக்க பள்ளி) வேங்கடமுத்து நடேசன், உதவி திட்ட அலுவலர் அழகர்சாமி பங்கேற்றனர். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்த 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்., 7 மற்றும் 8 ம் தேதிகளில் விழுப்புரம், தஞ்சாவூரில் மாநில போட்டி நடைபெறும். ///
