ADDED : செப் 03, 2026 05:31 PM
சிவகங்கை,செப்.4-
1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத் திருவிழாப் போட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கே.ஆர்.மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது. இப்போட்டியில் 1 முதல் 5 வகுப்பு பள்ளி மாணவர்களில் குறுவள மைய அளவில் முதலிடம் பெற்றவர்களும், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களும் பங்கேற்றனர்.
1= - 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 போட்டிகளும், 3-=5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 போட்டிகளும், 6--=8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, களிமண் சுதை வேலைப்பாடு, செதுக்கு சிற்பம், பரத நாட்டியம், பிறவகை நடனம் போன்ற 18 வகையான போட்டிகளும் என மொத்தம் 42 போட்டிகள் நடந்தது. போட்டியில் 1400 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் அழகர்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரூபாராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளிராசா கலந்து கொண்டனர்.
