ADDED : நவ 07, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: ராஜகம்பீரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் எம்.எல்.ஏ.,தமிழரசி தலைமையில் நடந்தது. மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி,வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ்,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புவனேஸ்வரன்,ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை,ராஜகம்பீரம் ஊராட்சி தலைவர் முஜிபுர் ரகுமான்,வட்டார கல்வி அலுவலர் அஸ்மிதா பானு, தலைமை ஆசிரியர்கள் செல்வன், அருண்மொழி கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்ந்த 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமையா நன்றி கூறினார்.