/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சட்டசபை தொகுதி தேர்தல் பணி ஆலோசனை
/
சட்டசபை தொகுதி தேர்தல் பணி ஆலோசனை
ADDED : ஜன 24, 2026 06:31 AM
சிவகங்கை: சிவகங்கையில் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா தலைமை வகித்தார். தாசில்தார்கள் சிவகங்கை மல்லிகார்ஜூனன், காளையார்கோவில் லெனின், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., சார்பில் நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்லமணி, அருள் ஸ்டீபன், தி.மு.க., சார்பில் வழக்கறிஞர் அணி பாஸ்கரன், காங்., நகர் தலைவர் விஜயகுமார், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட செயலாளர் பெரியார் ராமு உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிவகங்கை தொகுதியில் 721 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதை கண்டறிந்து நீக்க வேண்டும்.
மேலும் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர், இனிசியல், பிறந்த தேதி போன்று சிறு சிறு பிழைகள் உள்ளன. இதனால் அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவிடக்கூடாது என கோட்டாட்சியரிடம் வலியுறுத்தினர்.
இது குறித்து பதில் அளித்த கோட்டாட்சியர், போலி வாக்காளர்கள் சேர்ப்பை கண்டறிய ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கட்சியின் பூத் ஏஜன்ட்கள் இணைந்து ஆய்வு செய்து, உறுதி செய்த பின் நீக்கப்படும். அதே போன்று வாக்காளர் பட்டியலில் உள்ள சிறு சிறுபிழைகளை நீக்காமல், அதற்குரிய ஆவணங்களை சேகரித்து இப்பிழை திருத்தத்தை சரி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

