UPDATED : ஜூன் 29, 2026 10:04 PM
ADDED : ஜூன் 29, 2026 09:41 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:மானாமதுரை கால்நடை மருந்தகத்தில் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலைச்சாமி, முருகன் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் காமராஜ், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெபாஸ்டின், மாநில தலைவர் தாமோதரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, கால்நடை ஆய்வாளர் சங்கம் ராஜாமுகமது, கோட்டை செயலாளர் ஜெகதீசன் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் சந்தனகுமார் நன்றி கூறினார். ///
