ADDED : பிப் 16, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க அமைப்பு தின விழா தலைவர் ராபர்ட் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர்கள் பொன் ராமமூர்த்தி,காந்தி முன்னிலை வகித்தனர்.செயலாளர் கணேசன் வரவேற்றார், விழாவில் நலமுடன் வாழும் முறைகள் பற்றி மாஸ்டர் ராதாகிருஷ்ணன், சங்க செயல்பாடு வரலாறு சாதனைகள் பற்றி தலைவர் ராபர்ட் பேசினர்.
இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், வில்லான் மூர்த்தி, பிச்சை, நடராஜன், பொன்னுச்சாமி, சுகுமாரன், பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.