ADDED : மார் 11, 2024 05:44 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாய சங்க பிரதிநிதிகள் 2-0 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
இப்போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், மாவட்ட தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மானாமதுரை ஒன்றிய தலைவர் உக்கிரபாண்டியன், செயலாளர் மணிகண்டன், தர்மலிங்கம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எம்.எஸ்., சுவாமிநாதன் அறிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும்.
விவசாயிகள் பெற்ற வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரயில் மறியலுக்கு முயன்ற 20 பேர்களை போலீசார் கைதுசெய்தனர்.
